“அமைச்சுப் பதவி பற்றி கதைப்பதற்குக்கூட ஆசை இல்லை. இனி அதைப் பற்றி கதைக்கப்போவதும் இல்லை” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ‘அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகின்றது. எப்போது கல்வி அமைச்சைப் பொறுப்பேற்கின்றீர்கள்?” என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே எஸ்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
“அது பற்றி எனக்குத் தெரியாது. அது குறித்து கதைப்பதற்குக் கூட விரும்பவில்லை. கருத்து வெளியிடவும் மாட்டேன். பதவியைக் கேட்டு பெறப்போவதும் இல்லை.” – எனவும் எஸ்.பி. குறிப்பிட்டார்.