“தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை. தேசிய அரசாங்கம் தொடர்பாக எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை” என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசித்து வருகின்றார் என்றும், நாடாளுமன்றத்தில் இது தொடர்பான அழைப்பை விடுப்பார் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் வினவப்பட்டபோதே விவசாய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் எதுவும் கலந்துரையாடவில்லை என்றும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.