தேசிய அரசு தொடர்பில் அரசுடன் நான் பேசவில்லை! – சஜித் சொல்கின்றார்

Share

“தேசிய அரசமைப்பது தொடர்பில் தற்போதைய அரசுடன் எவ்வித கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அமைச்சுப் பதவிகள் பற்றியோ அல்லது வரப்பிரதாசங்கள் குறித்தோ அரசுடன் நான் எந்தவொரு கலந்துரையாலிலும் ஈடுபடவில்லை. தேசிய அரசு மற்றும் பிரதமர் பதவி பற்றியும் பேசவில்லை.

இருந்தும் அரச தரப்பால் திட்டமிட்ட அடிப்படையில் போலிப் பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் விலைபோகமாட்டார்கள்; சூதாட்ட அரசியலில் சிக்க வைக்கவும் மாட்டார்கள்.” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு