காலிமுகத்திடலில் இனி ஒன்றுகூடல்களுக்கு அனுமதி இல்லை!

Share

பொதுமக்கள் சுதந்திரமாக ஓய்வு நேரத்தை செலவிடுவதற்காக மாத்திரம் காலிமுகத்திடலை ஒதுக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, சமய நிகழ்வுகள் தவிர இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் காலிமுகத்திடலைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

சமூகப் பொறுப்பு செயற்றிட்டமாக காலிமுகத்திடலை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை துறைமுக அதிகார சபை பொறுப்பேற்றுள்ளதாகவும், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 220 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது சேதமடைந்த சொத்துகளைப் புனர்நிர்மாணிப்பதற்காக 6.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இசை நிகழ்ச்சிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக காலிமுகத்திடல் சேதமடைவதைத் தடுக்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு