591 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்திய இலங்கை!

Share

அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் இடம்பெற்று வருகின்றது.

நாணயச் சுழற்சியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 386 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இரண்டாம் நாளான இன்று தமது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி, 131 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 591 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இன்றைய நாளில் இலங்கை அணியின் தினேஷ் சந்திமால் மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் சதங்களைப் பெற்றதோடு, இறுதி வீரர்களாகக் களத்தில் இருந்தனர்.

இந்தநிலையில், இலங்கை அணி சார்பில், அதன் முதல் இன்னிங்ஸில் நால்வர் சதம் பெற்றுள்ளனர்.

நேற்றைய நாளில், திமுத் கருணாரத்ன (179) மற்றும் குசல் மெண்டிஸ் (140) ஆகியோர் சதங்களைப் பெற்றனர்.

இரண்டாம் நாளான இன்று தினேஷ் சந்திமால் (102*) மற்றும சதீர சமரவிக்ரம (104*) சதங்களைப் பெற்றனர்.

பந்து வீச்சில் முதல் இன்னிங்ஸில் அயர்லாந்தின் கார்டஸ் கெம்பர் 84 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

தற்போது அயர்லாந்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு