இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (16) ஆரம்பமாகின்றது.
ஒரே நேரத்தில் 35 ஆயிரத்துக்கும் அதிக பார்வையாளர்கள் போட்டியைக் கண்டுகளிக்கும் வசதி கொண்ட காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றைய போட்டியை இலவசமாகப் பார்க்க முடியும் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
காலி மைதானத்தில் இதுவரை 41 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இதில் 23 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளதுடன், 11 போட்டிகளில் எதிரணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
ஏனைய போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளன.
அன்ரு பெல்பேர்ன் தலைவராக உள்ள அயர்லாந்து அணி இலங்கையுடன் டெஸ்ட் தொடரில் பங்குபற்றும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அயர்லாந்து அணி 4 டெஸ்ட் தொடரில் பங்குபற்றியுள்ளதுடன், இதுவரை எவ்வித வெற்றியும் பெறவில்லை.
இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றிபெறும் எதிர்பார்ப்பில் களமிறங்குகின்றன.