மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் – தளவாயில் இன்று கோடரியால் தாக்கி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகல் முற்றி இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சின்னத்தம்பி வீதி – தளவாயைச் சேர்ந்த வயதான நபரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.