மகனின் தாக்குதலுக்கு இலக்காகி 57 வயதுடைய தந்தை சாவடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பதுளை, கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகஸ்கொட – கெந்தகொல்ல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது மகனின் தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை, பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காகக் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
30 வயதுடைய மகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை கஹட்டரூப்ப பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.