களனி கங்கை நீரோட்டத்தில் தவறி விழுந்து ஆண் ஒருவர் காணாமல்போயுள்ளார்.
கேகாலை – எட்டியாந்தோட்டைப் பகுதியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
எட்டியாந்தோட்டை – அத்தனகல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய குறித்த நபர், உணவு உட்கொண்ட பின்னர், களனி கங்கையில் கைகளைக் கழுவுவதற்காகச் சென்றபோது, நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களனி பிரதேசத்தில் இருந்து யாத்திரைக்காகச் சென்று மீண்டும் தமது சொந்த இடத்திற்குத் திரும்பிய நபரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
அவரைத் தேடும் பணிகளில் பொலிஸாரும், கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.