போதைப்பொருள் பாவனை: நிந்தவூரில் 9 பேர் சிக்கினர்!

Share

போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 9 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜேர்மன் நட்புறவு பாடசாலை அருகில் உள்ள பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமாகப் பலர் நடமாடுகின்றனர் என்று பொலிஸ் விசேட பிரிவுக்குக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் தலைமையில் நேற்றிரவு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 9 சந்தேகநபர்கள் பல்வேறு போதை தரக்கூடிய பொருட்களுடன் கைதாகியுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நிந்தவூர் பொலிஸ் பிரிவில் இரவு வேளைகளில் சந்தேகத்துக்கிடமாக நடமாடி ஆளடையாளங்களை உறுதிப்படுத்தத் தவறியவர்களும் சந்தேகத்தின் அடிப்படையில் தினமும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு