முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வள்ளிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் உள்ள குளம் ஒன்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
3ஆம் ஒழுங்கை, வள்ளிபுனத்தைச் சேர்ந்த டா.டேவிட் (வயது – 50) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குளத்தின் கரையில் இவரின் சைக்கிள், செருப்பு மற்றும் சரம் என்பன காணப்பட்டன.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குளத்தில் இறங்கி சடலத்தை மீட்டுள்ளார்.