பருத்தித்துறை வைத்தியசாலையில் சிசு சாவு: விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை!

Share

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசுவொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுமாறு, பொலிஸார் ஊடாக நீதிமன்றத்துக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜாவினால், மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புலோலி வடக்கு, கூவில் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்துக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

குறித்த பெண்ணுக்குக் குழந்தை பிறந்த போதிலும் இறந்துவிட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விடுத்த பணிப்புரைக்கு அமைய, சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

பிரசவ ஊசி செலுத்தப்பட்டதன் பின்னர் தாய் உரிய முறையில் கவனிக்கப்படாமையால், கருப்பை வெடித்து, சிசுவுக்குக் குருதி கடத்தப்படுவது தடைப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா தெரிவித்தார்.

இதன் அடிப்படையில், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, பருத்தித்துறை பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு