புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
ஏப்ரல் மாதத்துக்கான இரண்டாவது வார நாடாளுமன்றக் கூட்டத் தொடர் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
இதன்போதே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்கென நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலான தரப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.