ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படவுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார கருத்து வெளியிட்டுள்ளார்.
“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு வலுவான தலைமைத்துவம் வரும். தமிழ் – சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்” – என்று அவர் கூறினார்.
தலைமைத்துவத்தைப் பஸில் ராஜபக்ச ஏற்பாரா என்ற கேள்விக்கு ரஞ்சித் பண்டா நேரடிப் பதிலை வழங்க மறுத்துவிட்டார்.