பாடசாலை விடுமுறைக் காலத்தில் திருத்தம்! – கல்வி அமைச்சு ஆலோசனை

Share

2022 ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணை மே 29 ஆம் திகதி வரை தொடரும்.

இந்தநிலையில், புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் 2022 ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை ஜூன் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2022 ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு