உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
தேர்தலை நடத்துவது தொடர்பாக உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.
கலந்துரையாடலைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர்,
“எதிர்வரும் 25 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது. எதிர்காலத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் திறைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடத்தப்படும்.” – என்றார்.