நாட்டில் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 25 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 5 நாட்களில் 270 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன என்றும், மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.