வவுனியாவில் இன்று கூடும் தமிழ்க் கட்சிகள்!

Share

தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் இன்று வவுனியாவில் நடைபெறவுள்ளது.

வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் வரலாற்று அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தத் தமிழ்த் தேசியக் கட்சிகளும், மத மற்றும் சிவில் அமைப்பினரும் தீர்மானித்திருந்தனர்.

இதற்கான முதலாவது கலந்துரையாடல் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்தது. இதன்போது மாவட்ட மட்டத்தில் குழுக்களை அமைத்து போராட்டங்களை மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, முதலாவது கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெறவுள்ளது.

காலை 10.30 மணியளவில் வாடிவீட்டு விருந்தினர் விடுதியில் 7 தமிழ் அரசியல் கட்சிகளும், பல்வேறு பொது அமைப்புக்களும் கலந்துகொள்ளும் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு