சஜித்தின் கட்சிக்குள் பூகம்பம்! – மரிக்கார் அவசர வேண்டுகோள்

Share

“ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கோரிக்கை விடுக்கின்றோம். எமது கட்சியிலிருந்து அரசு பக்கம் செல்பவர்கள் தாராளமாகச் செல்லலாம். நாம் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொலன்னாவையில் இன்று (08) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்த அவர், மேலும் பேசுகையில்,

“ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணையவுள்ளன என்று கூறப்படுகின்றமை உண்மைக்குப் புறம்பான தகவலாகும்.

எம்மில் உள்ள 70 வயதைத் தாண்டிய சிலருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சுப் பதவியை வகிக்கவும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவும் ஆசையுண்டு. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

எனவே, கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் இவ்வாறான நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை வலியுறுத்துகின்றோம். சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று போராடிய சிலரில் நானும் ஒருவன். எனவே, இந்தக் கோரிக்கையை அவரிடம் முன்வைக்கும் உரிமை எனக்குண்டு.

தற்போது மக்களுக்கு இலவசமாக 10 கிலோ அரிசி வழங்கப்படுகின்றது. இலவசமாக அரிசியைப் பெற்று வாழும் நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தத் திட்டங்களின் நோக்கங்களை மக்கள் நன்கு அறிவார்கள்.” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு