பெண்ணொருவர் உட்பட மூவர் சடலங்களாக மீட்பு!

Share

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து பெண்ணொருவர் உட்பட மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் இரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

30 வயது மதிக்கத்தக்க இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார், சடலத்தை நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

குளியாப்பிட்டி பிரதேசத்தில் குளம் ஒன்றிலிருந்து வயோதிபப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் கணவர் (வயது 73) கடந்த மாதம் வீட்டில் தூக்கில் தூங்கி தற்கொலை செய்தார் என்றும், அதன்பின்னர் குறித்த பெண் வீட்டில் தனிமையில் வசித்து வந்தார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, தனமல்வில – பலஹருவ வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பலஹருவ பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் இருந்த வாவிக்கு அருகில் அவரது சைக்கிள் கண்டெடுக்கப்பட்டது என்றும், மரணத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு