குளிரூட்டி அறையை விடுத்து மக்கள் படும் துன்பத்தை நேரில் வந்து பாருங்கள்! – சஜித் வேண்டுகோள்

Share

“நாட்டின் நிலைமை நன்றாக உள்ளது என்று தலைநகர் குருந்துவத்தை குளிரூட்டி அறைகளில் இருந்து கொண்டு கூறும் நபர்களிடம் நாட்டின் உண்மை நிலையை அறிய குளிரூட்டி அறையை விட்டு வெளியேறி கிராமம் தோறும் மூலை முடுக்குகளுக்குச் சென்று பார்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாட்டிலுள்ள சில பாடசாலைகளைப் பார்த்தால் இடிந்து விழும் கட்டடங்களைத் தான் காணக்கிடைத்தாலும், இவ்வாறான கஷ்டப் பாடசாலைகளுக்கு சில கிலோமீற்றர் தூரத்தில் சர்வதேச விமான நிலையங்கள் கூட நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்கான பணத்தில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கி நாட்டின் கல்வியை அபிவிருத்தி செய்திருந்தால் எமது நாடு இன்று உலகில் குறிப்படத்தக்க இடத்தில் இருக்கும் நாடாக முன்னேறியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரபஞ்சம் நிகழ்ச்சித்திட்டத்தின் 27 ஆவது கட்டமாக ஹம்பாந்தோட்டை உடமத்தல கனிஷ்ட வித்தியாலயத்தில் இன்று (07) நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு