பல்லகெடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவநிவச – நாவலகம பகுதியில் 80 வயதுடைய தாத்தாவையும் 70 வயதுடைய பாட்டியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்த பேரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்ல, கீரியகொல்ல – மடுகஸ்தலாவ பகுதியில் உள்ள வனப்பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலையாளி கீரியகொல்ல – மடுகஸ்தலாவ வனப்பகுதியில் தலைமறைவாகி இருக்கின்றார் என்று பல்லகெடுவ பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலை அடுத்து பல்லகெடுவ பொலிஸாரும் பண்டாரவளை பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து குறித்த வனப்பகுதியைச் சுற்றிவளைத்துத் தேடுதலை மேற்கொண்ட போது சந்தேகநபர் வனப்பகுதியினூடாக வெல்லவாய பிரதேசத்துக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை பண்டாரவளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பல்லகெடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.