போலி கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிப்பதா? இல்லையா? என்ற தீர்மானம், எதிர்வரும் 24ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின்கீழ், டயனா கமகேவைக் கைது செய்வதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு, மனுதாரர் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளது.