பல்வேறு தரப்புக்களிலிருந்து எழுந்த கடும் எதிர்ப்புக்களையடுத்துப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதைப் பிற்போடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்சவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அனைவரினதும் கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.