ரைஸ் குக்கரின் மூடியால் மகளின் முகத்தில் சூடு வைத்த கொடூர தந்தை!

Share

ரைஸ் குக்கரின் மூடியால் தந்தை, தனது 16 வயது மகளின் முகத்தில் சூடு வைத்த சம்பவம் பின்வத்த, வடுபசல் வத்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

பின்வத்த, வடுபசல் வத்த பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமி தீக்காயங்களுடன் நேற்றிரவு தனது தாயுடன் சென்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்பின்னர் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 7.45 மணியளவில் சிறுமி சோறு சமைத்துக் கொண்டிருந்தபோது, வீட்டுக்கு வந்த தந்தை ரைஸ் குக்கரின் மூடியைத் திறந்து பார்த்து ஏன் இவ்வளவு சோறு சமைக்கிறீர்கள் என்று கேட்டு கொதித்துக் கொண்டிருந்த ரைஸ் குக்கரின் மூடியால் மகளின் முகத்தில் சூடு வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

முகம் மற்றும் கன்னங்களில் தீக்காயங்களுடன் சிறுமி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரான தந்தையைக் கைது செய்ய பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு