80 வயதுடைய தாத்தாவையும் 70 வயதுடைய பாட்டியையும் பேரன் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் பல்லகெடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான தாத்தாவும் பாட்டியும் தெமோதர வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட போது 80 வயதுடைய தாத்தா தெமோதர வைத்தியசாலையில் உயிரிழந்துவிட்டார்.
70 வயதுடைய பாட்டி மேலதிக சிகிச்சைகளுக்காகப் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாக்கிய சந்தேகநபரான பேரன் தலைமறைவாகியுள்ளார் என்று பல்லகெடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பல்லகெடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்கிய பேரன் போதைவஸ்து பழக்கத்துக்கு அடிமையானவர் என்று பல்லகெடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளைப் பல்லகெடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.