“அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடைபெறும் என்று தெரியாது. அந்தத் தேர்தலில் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்க வேண்டும் என்ற யோசனை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.”
– இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின், ஆளும் கட்சி உறுப்பினர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளதால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரை வேட்பாளராக எதிர்பார்ப்பதில் தவறில்லை.” – என்றும் அவர் சுட்டுக்காட்டினார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞசன விஜேசேகர தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.