“நான் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்தவன். எனவே, அமைச்சுப் பதவி கேட்டு அலைய வேண்டிய தேவை எனக்கு இல்லை.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
கட்சித் தலைமையகத்தில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டியது கட்டாயமாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.