மலையகத்தைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காணாமல்போய்விட்டார் எனக் கூறி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
அவசர பொலிஸ் பிரிவான 119 இற்கு அழைப்பை ஏற்படுத்தியே, முட்டாள்கள் தினமான ஏப்ரல் முதலாம் திகதி இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பில் இருந்துள்ளார்.
இவ்வாறு முறைப்பாடு செய்த நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்திய போது, அவர் சம்பந்தப்பட்ட எம்.பிக்கு நெருக்கமானவர் என்று தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த எம்.பி. கடந்த காலங்களில் கட்சி தாவலில் மன்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
“பொலிஸ் அவசர பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்தி போலித் தகவல்களை வழங்குவதும், முறையற்ற விதத்தில் நடந்துகொள்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறான முயற்சிகளில் எவரும் ஈடுபட வேண்டாம்” – என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.