ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சியின் சகல எம்.பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உள்ளிட்ட நடப்பு அரசியல் பற்றி இதன்போது ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.