முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று புதுக்குடியிருப்புப் பொலிஸார் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை குழந்தை யேசு கோயில் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு, 9 ஆம் வட்டாரம் மல்லிகைத்தீவைச் சேர்ந்த கி.ஜெமில்ராஜ் (வயது – 36) என்பவரே உயிரிழந்தவராவார்.