“ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அரசுடன் இணையமாட்டார்கள். எதிரணியைப் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே கட்சி தாவல் கதை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் உட்பட எதிரணியில் உள்ள 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணையவுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே, அவற்றை நிராகரிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி மேற்கண்டவாறு அறிவிப்பு விடுத்துள்ளது.