கொழும்பு – மிரிஹானவில் கோட்டாபய ராஜபக்சவின் வீட்டின் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு வருடப் பூர்த்தியைக் குறிக்கும் விதத்தில் அந்தப் பகுதியில் போராட்டம் ஒன்று தற்போது இடம்பெறுகின்ற நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு வருடத்துக்கு முன்னர் (31.03.2022) அவ்வேளை ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான வீட்டின் முன்னால் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தை நினைவுகூரும் வகையில் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மிரிஹானவில் போராட்டம் ஒன்றை தற்போது நடத்துகின்றனர்.
மிரிஹான ஜூபிலி தூண் அருகே நடைபெறுகின்ற இந்தப் போராட்டம் காரணமாக சுமார் 1,500 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 3 ஆயிரம் பேர் கொண்ட விசேட அதிரடிப் படையினர் மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் மிரிஹான ஆர்ப்பாட்டத்தின் பின்னரே ‘கோட்டா கோ கம’ உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.