வன்னியில் 6 மாதக் குழந்தையின் உயிரைப் பறித்த குப்பி விளக்கு!

Share

வன்னியில் குப்பி விளக்கு சரிந்து விழுந்து தீ பற்றியதில் தீக்காயங்களுக்கு உள்ளான 6 மாதக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம், விசுவமடு பகுதியைச் சேர்ந்த கஜீபன் பிரசாத் எனும் ஆண் குழந்தையே உயிரிழந்தது.

விசுவமடுவில் உள்ள வீட்டில் கடந்த 23ஆம் திகதி இரவு தாயுடன் குழந்தை உறங்கிக்கொண்டிருந்த வேளை, வீட்டின் வெளியே யானைகளின் சத்தம் கேட்டதால், தாய் வீட்டின் வெளியே சென்று பார்த்த போது , குழந்தை படுக்கையில் உருண்டு, குப்பி விளக்கைத் தட்டி வீழ்த்தியது.

அதையடுத்து ஏற்பட்ட தீ பரவலில் குழந்தை சிக்கி, தீக்காயங்களுக்கு உள்ளாகியது. அக்குழந்தை உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது.

மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு