ஐ.எம்.எப். கடன் இலங்கைக்குப் பேராபத்து! – ஜே.வி.பி. எச்சரிக்கை

Share

“சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மிகவும் பயங்கரமானது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது. ஏனெனில் அந்த நிபந்தனைகள் மிகவும் மோசமானவை.”

– இவ்வாறு ஜே.வி.பி. பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கூறியதாவது:-

“சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த கடனைச் சிலர் புதையல் கிடைத்துவிட்டது போல் கருதுகின்றனர். சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது. இந்த உண்மை தெரிந்திருந்தால் பட்டாசு கொளுத்தியிருக்கமாட்டார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது. பணவீக்கம் அதிகரிப்பு, கடனை மீளச் செலுத்தமுடியாமை உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டடிருந்த நாடொன்று சர்வதேச நாணய நிதியக் கடனால் எங்கும் மீண்டுள்ளதா?

நாடொன்று தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள மிக மோசமான நிபந்தனைகளே, இலங்கை விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு