முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவுக்கு விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அவரை எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.மொஹமட் நிஹால் இன்று உத்தரவிட்டுள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற கார் விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மரணமடைந்தமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதோடு, சாட்சியாளர்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.