திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கிதுல்வுதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஓட்டோ சாரதி உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த நான்கு பேரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இன்று காலை இடம் பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து அரச ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பின்புறமாகப் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டோ மோதியதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது ஓட்டோவில் பயணித்த கிண்ணியா ஜாவா வீதியை சேர்ந்த முன்னாள் பதிவாளர் எம்.எஸ்.எம்.நியாஸ் (வயது 61) மற்றும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் அதிகாரியும் (வயது 60), அவரது ஊழியரும் காயமடைந்துள்ளனர். அத்துடன் ஓட்டோ சாரதியும் காயமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.