அரசியலுக்கு ரோஸி ‘குட்பாய்’

Share

“அரசியலில் இருந்து ஓய்வுபெறும் எண்ணத்துடனேயே இருக்கின்றேன். இம்முறை மாத்திரமே தேர்தலில் போட்டியிடுகின்றேன். இனி போட்டியிடப்போவதில்லை.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயருமான ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“நான் கொள்கை அடிப்படையில் அரசியல் நடத்தும் நபர். எனவே, ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுச் செல்லமாட்டேன்.

தேசிய அரசியலில் இருந்து ஓய்வுபெறத் திட்டமிட்டேன். கொரோனா, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் மேயராக சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போனது. எனவே, திட்டங்களை முன்னெடுக்கவும், நான் தலைமைத்துவம் வழங்கிய அணிக்காகவுமே இம்முறை போட்டியிடுகின்றேன். இனிமேல் தேர்தலில் களமிறங்கமாட்டேன்” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு