யாழ்., நெடுந்தீவு வெடியரசன் கோட்டையின் வரலாற்றை மாற்றியமைத்து அதைப் பௌத்த இடமாக மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.