கொழும்பு, காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், சந்தேகநபராக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம் வாக்குமூலம் பதிவு செய்து நீதிமன்றில், முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குறித்த நீதிப்பேராணை மீதான விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது, பிரதிவாதியான தேசபந்து தென்னக்கோன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முன்வைத்த சமர்ப்பணங்களை நீதியரசர்கள் குழாம் ஆராய்ந்தது.
இதையடுத்து, குறித்த நீதிப்பேராணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.