வெடுக்குநாறி மலை எங்கள் சொத்து! தொல்பொருள் திணைக்களமே வெளியேறு!! – யாழ். பல்கலையில் போராட்டம் (Photos)

Share

வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்ட ஆதி சிலிங்கம் உடைக்கப்பட்டமையைக் கண்டித்து இன்று மதியம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்று, மண் திறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா?, வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, கச்சதீவு, நெடுந்தீவு எங்கள் சொத்து, காவிகளின் அட்டகாசத்துக்கு முடிவில்லையா?, இராணுவமே வெளியேறு, கடற்படையே வெளியேறு, எமது நிலம் எமக்கு வேண்டும், தொல்பொருள் திணைக்களம் அரசின் கைக்கூலியா? தொல்பொருள் திணைக்களமே வெளியேறு போன்ற கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு