யாழ்., தென்மராட்சியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.
கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி கஜீபன் (வயது 27) எனும் இளைஞரே இதன்போது சாவடைந்தார்.
உயிரிழந்த நபர் ஓட்டி வந்த ஹயஸ் ரக வாகனம் மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியோர மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.