வட்டகொடை, மடக்கும்புர அமர்நாத் விளையாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கரப்பந்தாட்டப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் கலந்துகொண்டார்.
அத்துடன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமர்நாத் விளையாட்டுக் கழகத்தின் தலைவருமான பழனி திகாம்பரத்தின் மகனான ராகுல் திகாம்பரமும் பங்கேற்றார்.
சோ. ஶ்ரீதரன், நகுலேஸ் உட்பட தொழிலாளர் தேசிய சங்க முக்கியஸ்தர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.