அனைத்துப் பல்கலை மாணவர் ஒன்றியத்துக்கு எதிராக யாழில் போராட்டம் (Photo)

Share

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தைக் கண்டித்தும், யாழ்ப்பாணத்தைக் குழப்ப வேண்டாம் எனத் தெரிவித்தும் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இன்று காலை 10.30 மணியளவில் யாழ். நகரில் ஒன்று கூடியவர்கள் திடீரெனப் பேரணியாக வந்து ரிம்மர் மண்டபம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அவர்கள், யாழ்ப்பாணத்துக்குத் தொழிற்சங்க நடவடிக்கை வேண்டாம், யாழ்ப்பாணத்தைக் குழப்பாதே, காணமல்போனோரை விடுதலை செய், அரசியல் கைதிகளை விடுதலை செய், வன்முறை வேண்டாம் போன்ற கோஷங்களை எழுப்பினர்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் ரிம்மர் மண்டபத்தில் இன்று ஒன்றுகூடியபோதே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு