தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச பட்டதாரிகளை இலங்கையின் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக நாளை நடைபெறவிருந்த போட்டிப் பரீட்சை அன்றைய தினம் நடைபெறாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பரீட்சை திகதி அறிவிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணை இன்றுடன் நிறைவடைகின்றது.
2023 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை எதிர்வரும் திங்கட்கிழமை 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2022 கல்வியாண்டின் மூன்றாம் பாடசாலை தவணை கடந்த டிசம்பர் 5ஆம் திகதி முதல் 3 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை விடுமுறை அளிக்கப்படவுள்ளது.