சகோதரியின் நகையைத் திருடி மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி வாங்கியவர் கைது!

Share

யாழ்ப்பாணத்தில் சகோதரியின் 5 பவுண் நகையைத் திருடி, அதனை அடகு வைத்து மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி வாங்கிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவர் வீட்டில் இருந்த தனது 5 பவுண் நகை களவு போயுள்ளது என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் முறைப்பாட்டாளரான பெண்ணின் சகோதரனைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையாகி சிறைத் தண்டனை அனுபவித்து தற்போது விடுதலையாகியுள்ள நபர் எனவும், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நகையைத் திருடி அடகு வைத்து அந்தப் பணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பவற்றை வாங்கினார் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு