இந்திய மீனவர்கள் 12 பேர் சிக்கினர்!

Share

யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கு அருகில், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, இரண்டு படகுகளும் மீட்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் புதுக்கோட்டை – ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்காக கடலுக்குச் சென்ற மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டித் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு