புதிய அமைச்சரவையில் சுகாதார அமைச்சு கிடைத்தால் அதைப் பாரமேற்கத் தான் தயார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அரசுடன் ராஜித இணையப்போகின்றார் என்பது நீண்ட நாட்களாக அடிபட்டுவரும் கதை. அவர் விரும்பும் சுகாதார அமைச்சு கிடைக்காமையினால்தான் அவர் அரசுடன் இணைவது தாமதமாகின்றது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.
இது தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த நல்லாட்சி அரசில் ராஜித சுகாதார அமைச்சராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.