அரசின் செயற்பாட்டுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஒன்றிணைவு (Photos)

Share

நீதித்துறையின் கண்ணியம் மற்றும் அதன் முன்வருகையைக் குறைமதிப்புக்கு உட்படுத்தும் அரசின் முயற்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்த கூட்டறிக்கையில் கையொப்பமிட்டனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் வரலாறு காணாத நெருக்கடியை நாடு தற்போது எதிர்கொண்டுள்ளதோடு, இத்தகைய சூழ்நிலைக்கு எதிரான ஒரு ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஆரம்பமாக இந்தக் கையொப்பமிடுதல் நிகழ்வு இடம்பெற்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு