இந்த வருடம் இதுவரை 260 பேர் பொலிஸிலிருந்து திடீர் விலகல்!

Share

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 260 பேர் பொலிஸ் சேவையில் இருந்து அறிவித்தல் எதனையும் வழங்காமல் விலகியுள்ளனர் என்று பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜன்ட்கள் என்றும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் பலர் மன அழுத்தம், பொருளாதாரப் பிரச்சினைகள், அதிக வேலை மற்றும் கடமையின் அழுத்தம், ஓய்வின்மை போன்ற காரணங்களால் பொலிஸ் சேவையை விட்டு விலகியுள்ளனர் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இவர்கள் அனைவரையும் முறைப்படி அறிவித்தல் வழங்கி பொலிஸ் சேவையை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் (2022) மாத்திரம் 900 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு